வெளியேற்றுதல் சுற்று: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

Update: 2024-05-22 13:37 GMT

Image Courtesy: X (Twitter)

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிசுற்று ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி 2வது தகுதிசுற்று ஆட்டத்திற்கு சென்றது.

இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

இதில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்