"அவர் ஆபத்தான வீரர், உலகக்கோப்பைக்கு அவரை தேர்வு செய்யுங்கள்" - ஐதராபாத் வீரரை பாராட்டிய ஹேடன்

ஐதராபாத் அணியின் முக்கிய வெற்றிகளின் அங்கமாக இருந்த பேட்ஸ்மேனை ஹேடன் பாராட்டியுள்ளார்.

Update: 2022-05-22 12:18 GMT

Image Courtesy : AFP 

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனின் கடைசி லீக் போட்டியில் ஐதராபாத் அணி பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த ஐதராபாத் அணி அதன் பிறகு மார்க்ரம், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் போன்ற வீரர்களின் அதிரடியால் அடுத்த 5 போட்டிகளில் வெற்றியை பெற்றது.

அதன் பிறகு மீண்டும் தொடர் தோல்வியை சந்தித்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் முக்கிய வெற்றிகளின் அங்கமாக இருந்தவர் ராகுல் திரிபாதி.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் திரிபாதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் இந்திய அணிக்காக இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த சீசனில் அவர் இதுவரை 13 போட்டிகளில் 393 ரன்கள் அடித்துள்ளார், இந்த நிலையில் அவர்க்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹேடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திரிபாதி குறித்து அவர் கூறுகையில், " அவர் பொறுப்புடன் விளையாடும் விதம் அற்புதம். கடினமாக முன்னோக்கி செல்லும் அவரது திறனை நான் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் அவரிடம் உள்ளது.

அவர் பந்தை ஸ்ட்ரைக் செய்யும் விதம் ஆபத்தானது. விக்கெட்டின் இருபுறமும் விளையாடும் ஒருவர்அவர் சிறப்பாக விளையாடுகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை நிதானமாக விளையாடும் அவரது திறமை என்னை மிகவும் கவர்ந்தது. நீங்கள் அவரை ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்கு அழைத்து செல்லுங்கள். ஏனெனில் அவர் அங்குள்ள பவுன்சி பிட்ச்களில் அந்த அற்புதமான ஷாட்களை ஆட முடியும்," என ஹேடன் தெரிவித்தார்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்