டி20 உலகக் கோப்பையில் இடம்.. சஞ்சு சாம்சன் பதிவு வைரல்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார்.;
image courtesy:PTI
மும்பை,
10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சனுக்கு சுப்மன் கில்லின் வருகையால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது கில் இல்லாததால் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ‘நிறங்கள் நிச்சயம் மங்காது’ என்ற தலைப்புடன் தனது புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.