3வது டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

. டாம் லாதம் , கான்வே இருவரும் சதமடித்து அசத்தினர்;

Update:2025-12-21 14:53 IST

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி கான்வே 227 ரன்கள் , கேப்டன் டாம் லாதம் 137 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 420 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கவேம் ஹாட்ஜ் சதமடித்து 123 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. டாம் லாதம் , கான்வே இருவரும் சதமடித்து அசத்தினர்.நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

462 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. பிரண்டன் கிங் 37 ரன்களும், கேம்பெல் 2 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்