சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

Update: 2024-04-28 13:35 GMT

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல்கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

சென்னை :

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன் ), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி , தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பதிரனா.

ஐதராபாத் :

அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் , நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது,  கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், நடராஜன்.

Tags:    

மேலும் செய்திகள்