ஐசிசி விருது 2023; வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பேட்ஸ்மேன்...!
2023ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.;
image courtesy; ICC
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் இளம் வீரர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களுக்கு வளர்ந்து வரும் இளம் வீரர் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்தவகையில், 2023ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் இலங்கையை சேர்ந்த தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒருவருக்கு 2023ம் ஆண்டின் வளர்ந்து வரும் இளம் வீரர் விருது ஐசிசி சார்பில் வழங்கப்பட உள்ளது.