ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடத்திற்கு முன்னேற்றம்

டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது

Update: 2022-09-07 09:58 GMT

Image Courtesy : AFP 

துபாய்,

டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் இடம் பிடித்துள்ளார்.தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஸ்வான் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார்.

2-வது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 3-வது இடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார் .

அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில் வுட் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி 2-வது இடத்தில் நீடிக்கிறார்.இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 3வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்