அந்த வீரருக்கு பந்து வீச எனக்கு பயம் - பேட் கம்மின்ஸ்

அந்த வீரருக்கு பந்து வீச எனக்கு பயமாக உள்ளது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-19 21:51 IST

ஐதராபாத்,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 69வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாபை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

சிறப்பாக ஆடிய ஐதராபாத் தொடக்க வீரர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 66 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில், வெற்றிக்குப்பின் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது, அபிஷேக் சர்மா (ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர்) மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நான் அவருக்கு பந்துவீச விரும்பவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அபிஷேக் சர்மா மிகவும் சுதந்திரமாக ஆடுவதால் அவருக்கு பந்து வீச எனக்கு பயமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்