டி20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி

ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியின் 2-வது பிரிவினர் புறப்பட்டு செல்கிறார்கள்.

Update: 2024-05-25 21:04 GMT

மும்பை,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக நியூயார்க்கில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இரு பிரிவாக அமெரிக்கா செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி தலைமை பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் நேற்று இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக நியூயார்க் செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்ததும் இந்திய அணியின் 2-வது பிரிவினர் புறப்பட்டு செல்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்