சர்வதேச மகளிர் கிரிக்கெட்; ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த அர்ஜென்டினா...!

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

Update: 2023-10-14 09:21 GMT

Image Courtesy: @WomensCricZone

ப்யூனோஸ் அரேஸ்,

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை உடைப்பது இப்போது வழக்கமாகி உள்ளது. அதிலும் தரமான டாப் அணிகளை தவிர்த்து இதர அணிகள் விளையாடும் போட்டிகளில் விசித்திரமான சம்பவங்களும் சாதனைகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 427 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

அர்ஜென்டினாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா தரப்பில் லூசியா டெய்லர் 84 பந்தில் 169 ரன்னும், அல்பர்ட்டினா காலென் 84 பந்தில் 145 ரன்னும், மரியா 16 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். சிலி தரப்பில் 64 நோ பால்கள் வீசியது 427 ரன்களை அடிக்க அர்ஜென்டினாவுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதையடுத்து ஆடிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன் மட்டுமே எடுத்து 364 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்