சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீராங்கனையாக புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Update: 2024-01-08 02:39 GMT

Image Courtesy: @BCCIWomen

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். அவர் இதுவரை 103 டி20 போட்டிகளில் ஆடி 1,001 ரன்களும், 112 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்