ஐ.பி.எல்: ஒரு சீசனில் குறைவான தோல்விகள் - ராஜஸ்தானின் சாதனையை சமன் செய்த கொல்கத்தா

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.

Update: 2024-05-27 03:10 GMT

Image Courtesy: AFP

சென்னை,

17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் அபார் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தா அணி 3 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி ஒரு ஐ.பி.எல் சீசனில் குறைவான தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியலில் ராஜஸ்தான் ( 3 தோல்விகள், 2008) அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

ஒரு ஐ.பி.எல் சீசனில் குறைவான தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியல்;

ராஜஸ்தான் ராயல்ஸ் - 3 தோல்விகள், 2008

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 3 தோல்விகள், 2024

குஜராத் டைட்டன்ஸ் - 4 தோல்விகள் - 2022

Tags:    

மேலும் செய்திகள்