ஐ.பி.எல்: போட்டி ஒன்று.. சாதனைகள் பல படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

Update: 2024-03-27 17:03 GMT

image courtesy: twitter/@IPL

ஐதராபாத்,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு ஐதராபாத் 277 ரன்கள் குவித்தது.

இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகும். ஐதராபாத் தரப்பில் கிளாசென் 80 ரன், அபிஷேக் சர்மா 63 ரன், ஹெட் 62 ரன் எடுத்தனர். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி ஆடி வருகிறது.

இந்த போட்டியில் அதிரடியில் கலக்கிய ஐதராபாத் பல சாதனைகளை படைத்துள்ளது.

அவை விவரம்

1. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகளின் பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தை பிடித்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 148 ரன்கள்

2. மும்பை இந்தியன்ஸ் - 141 ரன்கள்

3. மும்பை இந்தியன்ஸ்/ பஞ்சாப் கிங்ஸ் - 131 ரன்கள்

4. டெக்கான் சார்ஜர்ஸ் - 130 ரன்கள்

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 129 ரன்கள்

2. ஐ.பி.எல். வரலாற்றில் 200 ரன்கள் அடித்த அணிகளின் பட்டியலில் ஐதராபாத் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14.1 ஓவர்கள்

2. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 14.4 ஓவர்கள்

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு/ லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 15.5 ஓவர்கள்

3. டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. நேபாளம் - 314 ரன்கள்

2. ஆப்கானிஸ்தான்/ செக்குடியரசு - 278 ரன்கள்

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 277 ரன்கள்

4. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூருவிடம் இருந்து தட்டிப்பறித்து சன்ரைசர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 277 ரன்கள்

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 263 ரன்கள்

3. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 257 ரன்கள்

Tags:    

மேலும் செய்திகள்