ஐ.பி.எல்.: கோப்பையை வென்ற கொல்கத்தா முதல் வெளியேறிய பெங்களூரு வரை பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு..? முழு விவரம்

நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல். தொடரில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரங்கள் குறித்து இங்கு காண்போம்.

Update: 2024-05-27 05:49 GMT

image courtesy: twitter/@IPL

சென்னை,

17-வது ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அதனால் 2012, 2014க்குப்பின் 3-வது கோப்பையை வென்ற கொல்கத்தா வெற்றிகரமான ஐபிஎல் அணியாக வரலாறு படைத்தது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல். தொடரில் கொடுக்கப்பட்ட பரிசு தொகையை பற்றி பார்ப்போம்:

1. முதலில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

2. அடுத்ததாக 2-வது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரன்னர்-அப் கோப்பையுடன் ரூ. 12.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

3. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 3-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

4. மறுபுறம் எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6.5 கோடி பரிசு தொகையாக கொடுக்கப்பட்டது.

5. அடுத்ததாக அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு ஆரஞ்சு தொப்பியுடன் ரூ. 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.

6. அதேபோல பஞ்சாப் அணியில் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி 24 விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்ற ஹர்ஷல் படேலுக்கு ஊதா தொப்பியுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்பட்டது.

7. இந்த வருடம் ஐதராபாத் அணியில் சிறந்து விளங்கிய இளம் வீரர் நிதிஷ் ரெட்டி வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்றார். அவருக்கு அதற்கான கோப்பையுடன் 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

8. அதைத்தொடர்ந்து 488 ரன்கள் அடித்து 18 விக்கெட்டுகள் சாய்த்து தொடர்நாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் சுனில் நரேனுக்கு அதற்கான கோப்பையுடன் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

9. இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க்கிற்கு அதற்கான கோப்பையுடன் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

10. அதிக சிக்சர் அடித்த வீரரான அபிஷேக் சர்மாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

11. அதேபோல் அதிக பவுண்டரி அடித்த டிராவிஸ் ஹெட்டுக்கும் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

12. அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரராக தேர்வு செய்யப்பட்ட ஜேக் பிரேசர்-மெக்குர்க்கும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

13.கொல்கத்தா அணியின் ரமந்தீப் சிங் சிறந்த கேட்ச் பிடித்தார். அவருக்கும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

14. இறுதியாக பேர் பிளே விருதை வென்ற ஐதராபாத் அணிக்கு ரூ. 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்