திடீரென டிரெண்டிங்கில் "அய்யர் " ஹேஷ்டேக்: காரணம் என்ன.?
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக இருந்தார்.;
அகமதாபாத்,
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியா, சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ரோகித் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
முக்கியமான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கைக்கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அய்யருக்கு ஒருபுறம் ஆதரவும் பெருகி வருகிறது. 4-வது இடத்தில் களம் இறங்கி இரண்டு சதங்களுடன் அபாரமாக விளையாடினீர்கள்.
530 ரன்கள் குவித்துள்ளீர்கள். ரோகித் சர்மா 31 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், நீங்கள் 24 சிக்சர்கள் அடித்துள்ளீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு என "அய்யர்" ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.