ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அறிவிப்பு..!

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2023-12-13 08:14 IST

Image Courtesy: @ACCMedia1

துடெல்லி,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜனவரி 20-ந் தேதி வங்காளதேசத்தையும், அடுத்த லீக் ஆட்டங்களில் 25-ந் தேதி அயர்லாந்தையும், 28-ந் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

Advertising
Advertising

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்தியாவுடன், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் இந்த முத்தரப்பு தொடர் வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மற்றும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. துபாயில் நடந்து வரும் ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் அப்படியே இடத்தை தக்கவைத்துள்ளனர்.

இந்திய ஜூனியர் அணி வருமாறு:-

உதய் சாஹரன் (கேப்டன்), செளமிகுமார் பாண்டே (துணை கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் பட்டேல், சச்சின் தாஸ், பிரியன்ஷூ மொலியா, முஷீர் கான், முருகன் அபிஷேக், அரவெல்லி அவினாஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ஆரத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

முத்தரப்பு தொடருக்கான காத்திருப்பு வீரர்கள்; பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், அமான்

மாற்று வீரர்கள்: திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், பி விக்னேஷ், கிரண் சோர்மலே.



Tags:    

மேலும் செய்திகள்