ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்; நமீபியாவை சுருட்டி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-22 13:38 GMT

Image Courtesy: @ICC / icc cricket.com

ப்ளூம்போன்டைன்,

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

33.1 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நமீபியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நமீபியா அணி தரப்பில் அதிகபட்சமாக வான் வ்வூரன் 29 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கலம் விட்லர் 4 விக்கெட்டும், டோம் ஸ்ட்ரேக்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 92 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஹக் வெய்ப்ஜென் 39 ரன்கள் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்