மார்ஷ் மற்றும் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் ஆனால்... - தோல்வி குறித்து ரிஷப் பண்ட் கருத்து

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-03-29 02:13 GMT

Image Courtesy: @IPL

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிச்சயம் ஏமாற்றம்தான். இதிலிருந்து நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அதிலிருந்து கற்றுக்கொள்வதுதான்.

பந்து வீச்சாளர்கள் 15-16 ஓவர்கள் வரை நன்றாகச் செயல்பட்டனர். பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் இறுதி வரை சென்று விரைவாக ஸ்கோரை அடிப்பார்கள். அது இந்த ஆட்டத்தில் நடந்தது. மார்ஷ் மற்றும் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். நோர்ட்ஜே இறுதிக்கட்டத்தில் பந்து வீச வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவ்வாறு பந்துவீசும் போது சில சமயங்களில் நீங்கள் அதிக ரன்களுக்கு செல்லலாம். அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்