உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது - யுஸ்வேந்திர சாஹல்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமாக உள்ளது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-01 15:57 IST

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்த உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது குறித்து கேட்ட போது, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு சற்று வருத்தமாகத்தான் உள்ளது. எனினும் வாழ்க்கையில் எதையும் கடந்து போக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்று கொண்டிருக்கின்றேன். இது போன்றே 3 உலகக்கோப்பைகளில் இடம்பெறவில்லை. எனவே இந்த மனநிலை எனக்கு பழகிவிட்டது. என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்