பேட்டிங்கில் ஜொலித்த சாய் சுதர்சன் , ஷாருக்கான்...குஜராத் அணி 200 ரன்கள் குவிப்பு

அதிரடி காட்டிய சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

Update: 2024-04-28 11:50 GMT

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை அகமதாபாத்தில் நடைபெறும் 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , சஹா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 5 ரன்களிலும் , கில் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் இனணந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.

பெங்களூரு அணியின் பந்துவீச்சை இருவரும் பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த பிறகும் சாய் சுதர்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்