டி20 உலக கோப்பை தொடருக்கான தூதர் பட்டியலில் இணைந்த ஷாகித் அப்ரிடி

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

Update: 2024-05-24 14:59 GMT

கோப்புப்படம்

துபாய்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரின் தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்