மாற்றுத்திறனாளி ரசிகைக்கு செல்போன் பரிசளித்த ஸ்மிருதி மந்தனா
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.;
Image Grab On Video Posted By @OfficialSLC
தம்புல்லா,
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 109 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மாற்றுத்திறனாளி ரசிகை ஒருவரை சந்தித்து பேசி, அவருக்கு செல்போன் ஒன்றை பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.