டி20 கிரிக்கெட்; அதிவேகமாக 7000 ரன்கள்...சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-12 11:49 GMT

Image Courtesy: AFP

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு நிர்ணயித்த 197 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் இஷான் கிஷன் 69 ரன், சூர்யகுமார் யாதவ் 52 ரன் எடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் 52 ரன் எடுத்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அது என்னவென்றால் அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவை முந்தி அவர் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிவேகமாக (இன்னிங்ஸ் அடிப்படையில்) 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் (197 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், விராட் கோலி (212 இன்னிங்ஸ்) 2ம் இடத்திலும், ஷிகர் தவான் (246 இன்னிங்ஸ்) 3ம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் (249 இன்னிங்ஸ்) 4ம் இடத்திலும், சுரேஷ் ரெய்னா (251 இன்னிங்ஸ்) 5ம் இடத்திலும், ரோகித் சர்மா (258 இன்னிங்ஸ்) 6ம் இடத்திலும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்