டி20 உலகக்கோப்பை; டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - கனடா அணிகள் மோத உள்ளன.;
Image Courtesy: AFP
நியூயார்க்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நியூயார்க்கில் நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.
அயர்லாந்து தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியிடமும், கனடா, அமெரிக்காவிடம் தோற்று இருந்தது. அதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.