டி20 உலகக்கோப்பை; பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 16:13 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான அணிகளை அறிவிப்பதில் நாளை கடைசி நாளாகும். இந்த தொடருக்கான அணியை பாகிஸ்தான் மட்டுமே அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, முகமது அமீர், பக்கார் ஜமான், ஹாரிஸ் ராப், இப்டிகார் அகமது, இமாத் வாசிம் போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம்; பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசாம் கான், பக்கார் ஜமான், ஹாரிஸ் ராப், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.

Tags:    

மேலும் செய்திகள்