டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களுக்கு வழங்கிய உணவு சரியில்லை - பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.;
Image Courtesy: ANI
சிட்னி,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி, நாளை சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் இதுகுறித்து இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளுக்கு ஐசிசி உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.