டி20 உலகக்கோப்பை தொடருக்கான உகாண்டா அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான உகாண்டா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 12:16 GMT

Image Courtesy: @ICC

கம்பாலா,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள உகாண்டா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு பிரையன் மசாபா கேப்டனாகவும், ரியாசாத் அலி ஷா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உகாண்டா அணி விவரம்; பிரையன் மசாபா (கேப்டன்), சைமன் ஸ்செசாசி, ரோஜர் முகாசா, காஸ்மாஸ் கியூட்டா, தினேஷ் நக்ரானி, பிரெட் அச்செலம், கென்னத் வைஸ்வா, அல்பேஷ் ரம்ஜானி, ஃபிராங்க் நசுபுகா, ஹென்றி செனியோண்டோ, பிலால் ஹசுன், ராபின்சன் ஒபுயா, ரியாசாத் அலி ஷா (துணை கேப்டன்), ஜுமா மியாஜி, ரோனக் படேல்.

ரிசர்வ் வீரர்கள்; இன்னசென்ட் ம்வெபேஸ், ரொனால்ட் லுதாயா



Tags:    

மேலும் செய்திகள்