டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்தது - ரோகன் கவாஸ்கர்

டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த முடிவாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 04:07 GMT

Image Courtesy:AFP


டி20 போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

"விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க அவரே விரும்புவதாக சொல்லியதாக எனக்கு நியாபகம் உள்ளது. அது இந்திய அணிக்கும் உதவும்.

அதேபோல மூன்றாவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்க வேண்டும். இது நடக்க வேண்டுமெனில் ராகுல் அதற்கு தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. கோலி யாருக்கு எதிராக சதம் பதிவு செய்தார் என்பது முக்கியமல்ல. அவர் பதிவு செய்துள்ளது சர்வதேச சதம் என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். மீண்டும் அவர் ரன் மெஷினாக பார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்