ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் ராகுல் டிராவிட்?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவரின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். இவருடைய பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.