எம்.எஸ். தோனியின் தனித்துவமான சாதனையை சமன் செய்வாரா கம்மின்ஸ்..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி முன்னேறியுள்ளது.

Update: 2024-05-26 07:37 GMT

image courtesy:PTI

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

முன்னதாக கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஐதராபாத் இம்முறை பைனலுக்கு தகுதி பெற கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கிய காரணமாக திகழ்கிறார். வேகப்பந்து வீச்சாளரான அவர் கேப்டனாக அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நடப்பு சீசனில் கம்மின்ஸ் கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் எம்.எஸ். தோனியின் தனித்துவமான சாதனை ஒன்றை கம்மின்ஸ் சமன் செய்ய வாய்ப்புள்ளது. அதாவது 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக எம்.எஸ். தோனி உள்ளார். கடந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய கம்மின்ஸ் நடப்பு சீசனில் ஐ.பி.எல். கோப்பையை வென்றால் எம்.எஸ். தோனியின் இந்த தனித்துவமான சாதனையை சமன் செய்வார். 

Tags:    

மேலும் செய்திகள்