உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு...179 ரன்னில் ஆல் அவுட்டான நெதர்லாந்து...!
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.
லக்னோ,
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ டவுட் களம் இறங்கினர்.
இதில் வெஸ்லி பாரேசி 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மேக்ஸ் ஓ டவுட் உடன் காலின் அக்கெர்மென் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் மேக்ஸ் ஓ டவுட் 42 ரன்னிலும், அக்கெர்மென் 29 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய ஏங்கல்பிரெக்ட் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் களம் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் 0 ரன், பாஸ் டீ லீட் 3 ரன், சாகிப் சுல்பிகர் 3 ரன், லோகன் வான் பீக் 2 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய ஏங்கல்பிரெக்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.
அரைசதம் அடித்து அசத்திய ஏங்கல்பிரெக்ட் 58 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.