உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பரபரப்பான 5-வது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு.!

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2023-06-11 07:28 GMT

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கை ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. கோலி, ரகானே களத்தில் உள்ளனர்.

கடைசி நாள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றிபெறலாம் என்ற நிலை உள்ளது. ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால், கடைசி நாள் ஆட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகலில் இடியுடன் மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மழை குறுக்கிடாமல் போட்டி முழுவதுமாக நடைபெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்