உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : பட்டத்தை வெல்லப்போவது யார்? - புதிய புரோமோ வெளியிட்ட ஐசிசி
களத்தில் இரு அணிகளின் செயல்பாட்டை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது. ‘;
Image Courtesy : ICC
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது.பந்து வீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
v
— ICC (@ICC) June 2, 2023
️ 7 to 11 June
The Oval
Are you ready for The Ultimate Test?#WTC23 pic.twitter.com/ybFgXUq0fT
இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டி சார்ந்து புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. , சுமார் 1 நிமிடம் ரன் டைம் கொண்ட புரோமோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. களத்தில் இரு அணிகளின் செயல்பாட்டை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது. '