சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தெற்கு ரெயில்வே அணி வெற்றி

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-03-28 20:45 GMT

சென்னை,

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீனியர் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே அணி 1–0 என்ற கோல் கணக்கில் சுங்க இலாகா அணியை தோற்கடித்தது. இன்று மாலை 3.30 மணிக்கு ஐ.சி.எப்.ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை யுனைடெட் எப்.சி.–ஐ.சி.எப். அணிகள் மோதுகின்றன. முதல் டிவிசன் லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்வராஜ் எப்.சி. அணி 3–1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் ரியல் மெட்ராஸ் எப்.சி. அணி 7–0 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணியை தோற்கடித்தது. இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஒய்.எம்.எஸ்.சி.–சென்னை சிட்டி போலீஸ், இந்திய உணவு கழகம்–டான்போஸ்கோ இளைஞர் மையம் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்