கால்பந்து
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக ஹாரி நியமனம்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் விடைகொடுத்துள்ளார்.
லண்டன், உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் விடைகொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் செயல்படுவார், அவரிடம் அற்புதமான கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது என்று சவுத் கேட் கூறியுள்ளார்.ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம் பெற்றுள்ள 24 வயதான ஹாரி கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’ என்றார். ஹாரி கேன் இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார்.