கால்பந்து
மெக்சிகோ ரசிகர்களின் ஆபாச அர்ச்சனை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 0–1 கோல் கணக்கில் மெக்சிகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 0–1 கோல் கணக்கில் மெக்சிகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது ஜெர்மனி கோல் கீப்பர் மானுவல் நியர் எதிரணியின் ‘பிரிகிக்’கை தடுக்க தயாரான போது, மெக்சிகோ ரசிகர்கள் அவரை நோக்கி தகாத வார்த்தையால் திட்டினர். ஓரின சேர்க்கையாளரை ஒப்பிட்டு ரசிகர்கள் எழுப்பிய ஆபாச அர்ச்சனை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை (பிபா) தர்ம சங்கடத்திற்குள்ளாகி இருக்கிறது. இது குறித்து ‘பிபா’ விசாரணையை தொடங்கியுள்ளது. இதன் முடிவில் மெக்சிகோ கால்பந்து சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.