கால்பந்து அணியின் வீடு

உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கால் பந்து ஜுரம் ஆட் கொண் டிருக்கிறது.

Update: 2018-07-01 07:48 GMT
லக அளவில் ஏராளமான ரசிகர்களை கால் பந்து ஜுரம் ஆட் கொண் டிருக்கிறது. தங்கள் அபிமான அணிகள், வீரர்கள் மீது தாங்கள் கொண் டிருக்கும் பாசத்தை விதவிதமான செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத் திக் கொண்டிருக் கிறார்கள். ரஷியா வில் கால்பந்து நடக்கும் பகுதியில் ரசிகர்கள், அந்த நாட்டின் கொடிகளை பச்சை குத்திக் கொள்கிறார்கள். அதற்காக அமைக்கப் பட்டிருக்கும் இடம் திருவிழா கூட்டம் போல் காட்சி அளிக்கிறது.

இந்தியாவில் இருக்கும் கால்பந்து ரசிகர்களும் தங்கள் அன்பை கடல் கடந்து வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கொல்கத்தாவை சேர்ந்த சங்கர் பத்ரா அர்ஜெண்டினா அணியின் தீவிர ரசிகர். அவர் தனது வீட்டுக்கு அர்ஜெண்டினா வீரர்கள் அணியும் டி- சர்ட்டின் நிறமான நீலம், வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளார். வீட்டின் முகப்பு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அங்கும் அதே நிறத்தில் வர்ணம் தீட்டியதோடு தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அர்ஜெண்டினா வீரர்கள் அணியும் டி-சர்ட் போன்ற உடையை பரிசாக தருகிறார்.

இதேபோல் கேரளாவை சேர்ந்த சுதீர், பிரேசில் அணியின் தீவிர ரசிகர். இவர் தனது வீட்டின் நிறம், கார், மோட்டார் சைக்கிள் நிறத்தை பிரேசில் அணியின் நிறத்திற்கு மாற்றிவிட்டார். காரில் பிரேசில் வீரர்களான நெய்மர், ரொனால்டோ, கார்லோஸ், கோட்டினோ ஆகியோரின் உருவ படங்களை பதித்துவைத்திருக்கிறார். இதற்காக போக்குவரத்து துறையிடம் சிறப்பு அனுமதியும் பெற்றிருக்கிறார்.

மேலும் செய்திகள்