ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் : நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அறிவிப்பு

கடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இவர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கு துணை பயிற்சியாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-10-25 09:55 GMT
கோவா 

இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இதில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. இது வரை நடந்த 7 ஐஎஸ்எல் கால்பந்து தொடரிலும்  அனைத்து அணிகளுக்கும் வெளிநாட்டு  வீரர் ஒருவரே  பயிற்சியாளராக  செயல்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் காலித் ஜமீல் இந்தியன் சூப்பர் லீக் வரலாற்றில் முதல் முழு நேர தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி நேற்று வெளியிட்டது.

காலித் ஜமீல் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆவர். 44 வயதாகும் இவர் இந்தியா அணிக்காக 47 போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.கடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இவர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி  அணிக்கு துணை பயிற்சியாளராக  செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்