ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- கோவா அணிகள் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Update: 2024-04-13 23:44 GMT

கோவா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில் கோவா அணி தனது அதிக்கத்தை தொடர போராடும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்ட இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்