ஐ.எஸ்.எல் கால்பந்து : இவான் கலியுஸ்னியை ஒப்பந்தம் செய்தது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி

உக்ரைன் நாட்டை சேர்ந்த மிட்பீல்டர் இவான் கலியுஸ்னியை கேரளா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.;

Update:2022-07-19 16:17 IST

Image Tweeted By @KeralaBlasters

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணி கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ்டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்தது. பின்னர் ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக செய்வதாக அந்த அணி அறிவித்தது.

இந்த நிலையில் அந்த அணி தற்போது 3-வது வெளிநாட்டு வீரராக உக்ரைன் நாட்டை சேர்ந்த மிட்பீல்டர் இவான் கலியுஸ்னியை ஒப்பந்தம் செய்துள்ளது. 24 வயதான இவர் மெட்டலிஸ்ட் கார்கிவ் அணிக்காக விளையாடி தனது கால்பந்து வாழக்கையை தொடங்கினார். பின்னர் அவர் உக்ரைனிய ஜாம்பவானான டைனமோ கிய்வ் உடன் இணைந்து யூஇஎப்ஏ யூத் லீக்கில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்