500 கோல்கள் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ..!

கிளப் போட்டியில் , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-02-10 08:56 GMT

Image Courtesy : AlNassrFC_EN/ Twitter

சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார்.நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார்.

இந்த் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில் , அவரது 500வது கோல் ஆகும்.

ரொனால்டோ இதுவரை கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும, தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்