ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்: 3-வது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி

3 போட்டிகளின் முடிவிலேயே இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது.

Update: 2024-04-10 12:27 GMT

image courtesy: twitter/@TheHockeyIndia

பெர்த், 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 1-5, 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் முந்தைய போட்டிகளைப்போல் அல்லாமல் இந்திய அணி வெற்றிக்கு மல்லுக்கட்டியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. ஆனால் ஆஸ்திரேலியா 44 மற்றும் 49-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரை தன்வசப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜெர்மி ஹேவர்ட் வெற்றிக்குரிய அந்த இரு கோல்களையும் அடித்தார். இந்தியா தரப்பில் ஜுக்ராஜ் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்