ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி தொடர்: இந்திய அணி 2-வது தோல்வி

நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

Update: 2024-04-07 15:10 GMT

image courtesy: twitter/ @TheHockeyIndia

பெர்த்,

இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியிருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. முந்தைய போட்டியை போலவே இதிலும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முழு நேர ஆட்ட முடிவில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேவர்ட் ஜெர்மி 2 கோல்களும், ஆண்டர்சன் ஜேக்கப் மற்றும் எப்ராம்ஸ் நாதன் தலா 1 கோலும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜுக்ராஜ் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் மட்டுமே தலா 1 கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்