சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2024-03-14 22:45 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் 8-1 என்ற கோல் கணக்கில் அடையார் யுனைடெட் கிளப்பை துவம்சம் செய்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி - சென்னை மாநகர போலீஸ் (காலை 7 மணி), இந்திய உணவு கழகம் - தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2 மணி), ஐ.சி.எப். - எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்