மகளிர் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.;
image courtesy; twitter/@TheHockeyIndia
மஸ்கட்,
முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் ஓமன், மலேசியா, பிஜி, நெதர்லாந்து, பி பிரிவில் ஆஸ்திரேலியா,தென் ஆப்ரிக்கா, உக்ரைன், ஜாம்பியா, டி பிரிவில் நியூசிலாந்து, உருகுவே, தாய்லாந்து, பராகுவே ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
இந்திய மகளிர் அணி இடம் பெற்றுள்ள சி பிரிவில் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தொடக்க நாளான நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் போலந்து மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியாவுடன் இன்று மோதியது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-2 கோல் கணக்கில் நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது பிரிவில் முதலிடம் பெற்றதுடன் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.