புரோ கபடி லீக்: குஜராத் அணி அபாரம்

12 அணிகள் பங்கேற்றுள்ள 5–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 7–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் அறிமுக அணியான

Update: 2017-08-01 20:50 GMT

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 5–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 7–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் அறிமுக அணியான குஜராத் 26–20 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்தது.

இன்றைய ஆட்டங்களில் குஜராத்–அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்