தென் மண்டல தடகளம் தமிழக வீராங்கனைக்கு 2-வது தங்கம்

28-வது தென் மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

Update: 2017-09-19 21:45 GMT
திருவனந்தபுரம்,

28-வது தென் மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 14.8 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். முதல் நாளில் நடந்த நீளம் தாண்டுதலிலும் அவர் தங்கம் வென்று இருந்தார். தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

மேலும் செய்திகள்