ஆசிய பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு சொந்த கிராமத்தில் வரவேற்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்–கலைச்செல்வி தம்பதியின் மகள் கமலி.

Update: 2018-05-09 21:33 GMT

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்–கலைச்செல்வி தம்பதியின் மகள் கமலி. முதுகலை பட்டதாரியான இவர் பளுதூக்குதல் வீராங்கனை ஆவார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஆசிய பளுதூக்குதல் போட்டியில் 47 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கமலி தங்கப்பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் சொந்த ஊரான அக்கியம்பட்டி கிராமத்திற்கு திரும்பினார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கமலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நான் ஆசிய பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்பதற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். எனது தந்தை இறந்து விட்ட நிலையில், எனது தாயார், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசிய போட்டியில் பங்கேற்க எனக்கு உதவிகள் செய்தனர். அதை நான் மறக்க மாட்டேன். ரெயில்வே துறையில் வேலைக்கு விண்ணப்பித்து காத்து இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்