கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் நியமனமா?

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-08-10 00:02 GMT

* ரோட்டரி கிளப் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் லேடி ஆண்டாள்-நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின. முதலில் ஆடிய நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி அணி 47.4 ஓவர்களில் 112 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய லேடி ஆண்டாள் அணி 52.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார். ஆற்காடு இளவரசர் நவாப்ஜாதா முகமது ஆசிப் அலி, ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.செல்லப்பன், ரோட்டரி மாவட்ட கவர்னர் ஸ்ரீதர் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

* கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று விட்ட நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்தியா ‘ஏ’- வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ கிரிக்கெட் அணிகள் இடையே அதிகாரபூர்வமற்ற 4 நாள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது. இதில் 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணி 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இதன் பின்னர் சுப்மான் கில்லும், கேப்டன் ஹனுமா விஹாரியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். அபாரமாக ஆடிய சுப்மான் கில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணிக்காக கால்பதித்து முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவரது தற்போதைய வயது 19 ஆண்டு 334 நாட்கள். இந்திய ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 365 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சுப்மான் கில் 204 ரன்களுடனும் (248 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்), விஹாரி 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் செய்திகள்