சீன ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரைஇறுதிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சாத்விக்-சிராக் ஜோடி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

Update: 2019-11-08 23:05 GMT
புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் லின் ஜூன் ஹூய்-லின் யூ சென் இணையை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை, நம்பர் ஒன் ஜோடியான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை (இந்தோனேஷியா) எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்